search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட புத்தகங்கள்"

    • ஈரோடு மாவட்டத்தில் 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிர படுத்தப்ப ட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கொல்லம் பாளையம் ெரயில்வே காலனி மேல்நிலைப்ப ள்ளியில் இருந்து 6, 7-ம் வகுப்புக்கான 2-ம் பருவ பாட நூல்களும், 6 முதல் 9-ம் வகுப்பு களுக்கான நோட்டுகளும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர்கள் கூறியதாவது:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு 2-ம் பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கியுள்ளன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகள் என 55 பள்ளிகளுக்கு தேவையான 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. 5 பாட புத்தகங்களுக்கு தேவையான 5 வகையான நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போல சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம் இருந்ததை அடுத்து அந்த புத்தகங்களுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8-ம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.

    இந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ×